விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா. விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கிறது.  60 வயது பூர்த்தியான விவசாயிகள் தகுதியானவர்கள். 18 முதல் 40 வயது வரையுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து தங்களின் 60 வயது வரை ஓய்வூதியத்திற்கான ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.  அதே நேரத்தில் பதிவு செய்துள்ள விவசாய ஏதேனும் காரணத்தால் இறந்தால் அவருடைய மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு செல்போன் எண்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை ,வயது சான்றிதழ், வருமான சான்றிதழ், நில ஆவணங்கள் வங்கி புத்தகம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். 60 வயதுக்கு மேல் விவசாயி இறக்கும் பட்சத்தில் அவரது மனைவிக்கு பாதி ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.