இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக மத்திய அரசு சார்பில் பிஎம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு பி எம் கிசான் நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் பட்டா உள்ளிட்ட விவரங்கள் e-KYC பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அரசு விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு 18வது தவணை 2000 ரூபாய் கிடைக்காது எனவும் எச்சரித்துள்ளது.