தமிழகத்தில் ஆடு, மாடு , கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு 1800 கோடி வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வட்டி இல்லா கடன் நடப்பு நிதியாண்டில் ஆயிரத்து 500 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி விவசாயிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.