இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் மத்திய அரசு பிஎம் கிஷான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 17 தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6000 ரூபாய் உதவித்தொகையை 12,000 ரூபாயாக உயர்த்தவும் இது குறித்து அறிவிப்பு நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.