பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் தவணை முறையில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 முறையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் 17 வது தவணை தொகை சமீபத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 18-வது தவணைத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 18-வது தவணை தொகை பணம் வரவு வைக்கப்படும்.

இந்த தவணையுடன் சேர்த்து நிலுவையில் உள்ள தவணை பணத்துடன் ரூ.6,000 டெபாசிட் செய்யப்பட இருக்கிறது. இருப்பினும் சில தகுதி வாய்ந்த விவசாயிகள் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணத்தை பெற முடியாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் கேஒய்சி சரியாக நிரப்பப்படாதது தான். மேலும் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் உடனடியாக கேஒய்சி-ஐ செயல்பாட்டை முடிக்க வேண்டும். அதன் பிறகு வங்கி கணக்கில் பணம் ஏறும். மேலும் இதனை சரி செய்யும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.