உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை முதல்வர் டி.கே சிவகுமார் பங்கேற்றார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு துணை முதல்வர் டி.கே சிவகுமார் சைக்கிள் ஓட்டினார்.

அப்போது திடீரென நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே பதற்றம் அடைந்த காவலர்கள் அவரை தூக்கி விட்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.