
ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வனப்பகுதியில் இருந்து 3 உடும்புகளை பிடித்து வந்துள்ளார். இதனை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். அதோடு குழந்தைகள் அதனுடன் விளையாடும் வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர் வீட்டில் உடம்புகள் இருப்பது தெரியவந்த நிலையில் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் இதனைத்தொடர்ந்து சிரஞ்சீவியை வனத்துறையினர் கைது செய்தனர்.