
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என கூறினார். தற்போது கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஷால் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்து விட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது கூறுகிறேன்.
ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன் என கூறினார். இந்த நிலையில் நடிகை சாய் தன்சிகாவை தான் விஷால் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. இவர் பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடித்த யோகி டா படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் விஷால் திருமணம் குறித்து கூறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விஷால், சாய் தன்ஷிகா இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் அறிவித்துள்ளார்.