
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற ஓராண்டுக்குள் 5 உத்திரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச் சுமையில் சிக்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு கர்நாடகா அரசும் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும் ஆலோசித்து வருகின்றது. பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்தும் நீர் உள்ளிட்ட அனைத்து வகையான நீர் கட்டணத்தையும் 40% உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த குடிநீர் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு கர்நாடக அரசிடம் பெங்களூரு குடிநீர் வாரியம் பரிந்துரை செய்துள்ள நிலையில் அரசு உத்தரவிட்டதும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.