
சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெ.ஜெ டிவிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி என சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க சசிகலா உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.