
விருதுநகர் தொகுதிகள் தேமுதிக சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்கள். இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த விஜய பிரபாகரன் திடீரென பின்னடைவை சந்தித்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் இருக்கிறார். இதனால் விருதுநகர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தன்னுடைய மகனின் வெற்றிக்காக தியானத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.