
சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 28ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை www.chennaisuperkings.com என்ற இணையதள முகவரியில் புக் செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் சென்னை-பெங்களூர் இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகளும் ஒரு சில நிமிடங்களில் வெற்றி தீர்ந்தது. ஆன்லைனில் முன்பதிவு ஓபன் ஆன சில நொடிகளில் காத்திருப்பு வரிசை மூன்று லட்சத்தை கடந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இதற்கு முன்பு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது குறிப்பிடதக்கதாகும்.