இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட் கோலியை முன்கூட்டியே அவுட் ஆக்க தவறினால் இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் கடினம். பெரிய போட்டிகளில் விராட் கோலி அழுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதை உத்வேகமாக எடுத்துக் கொள்வார். டாப் கிளாஸ் வீரரான அவர் எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர்.

எனவே 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலியை முன்கூட்டியே அவுட் ஆக்குவது மட்டும்தான் ஒரே வழி. நீங்கள் ஸ்ட்ரைக் ரேட் பற்றி எவ்வளவு பேசினாலும் தன்னுடைய அணியை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது விராட் கோலிக்கு நன்றாக தெரியும். மேலும் சூழ்நிலையும் எதிரணியும் என எதுவாக இருந்தாலும் அது விராட் கோலிக்கு எதிராக பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ளார்.