இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதுமே கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலமாக வந்து ஏடிஎம்மில் 26.69 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரிவிரியாலாவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் கடந்த இரண்டாம் தேதி கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

கொள்ளையர்கள் ஏடிஎம் மிஷினை கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து பணத்தை நான்கு நிமிடங்களில் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். மேலும் கேஸ் கட் செய்து கொள்ளையடிப்பது எப்படி என்று குறித்து யூடிபில் பார்த்து கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரில் ராகுல் கான்(25), முஸ்தகீம் கான்(28), ஷாருக் ஷீக் கான், ரபீக் கான் (25) உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம், ஏடிஎம், கொள்ளையடிக்க பயன்படுத்திய கேஸ் கட்டர், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.