
பாஜக கட்சியின் பிரமுகர் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் போன்ற நானும் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன். அந்த சமயத்தில் இரு மாபெரும் தலைவர்களை நான் துணிச்சலாக தனி ஆளாக எதிர்த்து நின்றேன். அந்த சமயத்தில் மக்கள் என் படங்களை கூட்டம் கூட்டமாக சென்று தியேட்டரில் சென்று பார்த்தார்கள். விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் விஜய்க்கு சில விஷயங்களில் புரிதல் இல்லை.
அதாவது நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை மற்றும் கவர்னர் பதவி உள்ளிட்ட விஷயங்களில் புரிதல் இல்லாமல் பேசுகிறார். விஜய் புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். அவர் கொள்கை தலைவராக அம்பேத்கரை அறிவித்துள்ள நிலையில் அரசியலமைப்பு புத்தகத்தில் உள்ள கவர்னர் பதவியை எப்படி நீக்க வேண்டும் என்று கூறுவார். விஜயின் வீட்டில் எல்லோருமே ஹிந்தி தான் பேசுகிறார்கள். இப்படி இருக்கும்போது எப்படி விஜய் மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று கூற முடியும். மேலும் விஜய் யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை தான் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று கூறினார்.