
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு விஜய் தலைமையில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே லியோ ஆடியோ லான்ச் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் தற்போது வெற்றி விழாவிலும் கலந்து கொள்ள முடியாததால் அதிருப்தியில் உள்ளனர். லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 540 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.