தான் நடிக்கும் படங்களில் நகைச்சுவை மூலமாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். எப்போதும் இவருடைய பேச்சு நகைச்சுவையாகவே இருக்கும். லத்திகா எனும் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆனாலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் இன்று வரை இவருடைய அடையாளமாக இருக்கிறது. அதன் பிறகு இவர் தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். தற்போது இவர் ஆசையா? தோசையா? என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது தளபதி விஜய் அரசியல் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் விஜய் களத்திற்கு வர சொல்லுங்கள் விஜய். அவர் எந்த தொகுதியில் என்றாலும் அவரை நான் எதிர்த்து நிற்பேன்” என்று கூறியுள்ளார்.