பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா என்று சென்னை தி. நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது திமுக அரசு கோவில் நிதியை தவறாக பயன்படுத்துகிறது. முருகன் மாநாடு நடத்திய நிலையில் அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆன்மீக மாநாடு இல்லை என்று கூறினார். அப்படி ஆன்மீக மாநாடு இல்லை என்றால் அதற்கு ஏன் கோவில் நிதியை செலவு செய்ய வேண்டும். நவம்பர் 7ஆம் தேதி தஞ்சாவூருக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு கோவில் பணத்தின் மூலம் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கட்சிப் பணத்தில் இதற்கு செலவு செய்ய வேண்டியது தானே. அடுத்தவர்களின் விருப்பத்திற்கு எதிராக திணிப்பது கூட பாசிசம் தான்.

அப்படி என்றால் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் பாசிசம். விஜய் தற்போது திமுகவை எதிர்ப்பதால் அஜித் தங்களுக்கு கிடைத்து விட மாட்டாரா என்று திமுக ஏங்குகிறது. இதனால்தான் நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். அஜித்தை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளத்தான் தற்போது திமுக முயற்சி செய்கிறது என்று கூறினார். மேலும் அஜித் புதிதாக கார் ரேஸ் கம்பெனி ஒன்றினை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ வெளியிட்ட விஜய் பயன்படுத்தியதால் அதற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு நாம் இணைந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வோம் என்றும் நடிகர் அஜித் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.