
அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இது பெரியார் மண். திராவிட மண். ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் பெரியாரை பற்றி பேசுவார்கள் ஆனால் பெரியாரை விமர்சிக்கும் நபர்கள் சீமானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் தமிழ்நாடு அரசியலில் இருந்து கூடிய விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறினார். அடுத்ததாக எம்ஜிஆரின் பாடல் வரிகளை பயன்படுத்தி நான் ஆணையிட்டால் என விஜய் சாட்டையை பிடித்தபடி படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன் அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், தலைவர் எம்ஜிஆர் பாடல்களும், தத்துவங்களும், கருத்துக்களும் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. எல்லாராலும் பேசப்படுகிற மிகப்பெரிய தலைவராக தான் எம்ஜிஆர் இருப்பார் என கூறினார். விஜயுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு விஜய் எங்களுக்கு எதிரி இல்லையே.. அவர் கட்சி ஆரம்பித்து அவரது கொள்கைகளை பிரகடனப்படுத்துகிறார். எங்கள் கட்சி கொள்கைகளை நாங்களும் பேசுகிறோம். அவர் அவரது வேலையை பார்க்கிறார். எங்களது வேலையை நாங்கள் பார்க்கிறோம் என கூறியுள்ளார்.