தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நிலையில் நேற்று அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக சென்னை பனையூர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடைய அரசியல் வருகை தமிழகத்தில்  திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு நடிகர் விஜய்க்கு சீமான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் நடிகர் விஜய் கட்சிக்கொடியினை அறிமுகம் செய்து வைத்தது தொடர்பாக தன் கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியினை தொடங்க அதிகாரம் இருக்கிறது. மேலும் அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார் ‌