
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் தற்போது பணிகள் முழுவதும் வீட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அதன் நினைவாக 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிரந்தரமாக அமைக்கப்படுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்த ஏற்கனவே காவல்துறையினர் 33 நிபந்தனைகள் விதித்திருந்தனர். அதில் 22-ஐ கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் 5 கேள்விகள் கேட்டு காவல்துறையினர் தமிழக வெற்றி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது தற்போது மழை பெய்தால் மாநாட்டிற்கு வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக என்ன செய்யப் போகிறீர்கள். வாகனம் நிறுத்தும் இடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை. தொண்டர்கள் வாகனங்கள் இருக்கும் இடங்களை உடனடியாக தேர்வு செய்து அதற்கான வரைபடத்தை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள் எந்த மாதிரியான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து ஒப்படைக்க வேண்டும். போன்ற கேள்விகள் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கு மீண்டும் காவல்துறையினர் கேள்வி கேட்டு நோட்டீஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.