
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுகவின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றதற்கு என தனி வரலாறு இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்று கூறினார். அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும் பேசினார்.
அவர் பேசும்போது விஜய் பொது சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் விஜய் நடித்தும் முதல் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் பொது சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்கியுள்ள நிலையில் வேண்டுமென்றே அவருடைய மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் திமுகவினர் அலைகழிகிறார்கள். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு மட்டும் இன்றி அதிமுக நடத்தும் போராட்டங்களுக்கும் வேண்டும் என்றே தடை போடுகிறார்கள் என்று கூறினார்.