
விஜய்யின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், நோக்கங்களையும் அரசியல், முன்னோடிகளையும் எடுத்துரைத்தார். இந்த நிலையில் தமிழசை சௌந்தர்ராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. விஜய் அவர்களின் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சில நிகழ்வுகள் நடந்ததற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதாரணத்திற்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது, பேசுவதற்கு முன்னால் தாய் தந்தையரை வழங்கியது, அடையாளத்தை உறுதிப்படுத்தியது, பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று கூறியது, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பேன் என்று கூறியது பாராட்டுக்குரியது. தனது எதிரிகளை அடையாளப்படுத்துகிறேன் என்று கூறி அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
ஊழலை கடுமையாக எதிர்ப்பேன் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு ஆபத்து என்று துணிச்சலாக பிரகடனப்படுத்தியது. மக்களிடம் மனம் மாற்றத்தை ஏற்படுத்தும் குடும்ப ஆட்சியின் உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். பாஜகவை மறைமுகமாக என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாஜக மக்களை பிளவுபடுத்தவில்லை.
என்ற தங்கள் கொள்கைதான் மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அனைத்து திட்டங்களும். ஆளுநர்களை நீக்க வேண்டும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாநிலத்திற்கு நல்லது செய்த ஆளுநர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்கரை பாராட்டிவிட்டு அரசியலமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளவு இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல. உங்கள் உங்கள் அரசியல் எதிரியை மக்கள் நலனுக்காக முன்னெடுத்து சென்றால் நல்ல அரசியல் மாற்றத்திற்கு இயக்கம் வித்திடக்கூடும். மக்களுக்கான சேவையை முன்னெடுத்துச் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.