தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் அரசியல் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திராவிட கட்சிகளுக்கு சவால் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதிலிருந்து பாஜக மற்றும் திமுகவை நேரடியாகவே விஜய் விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைக்க விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில் 120 மாவட்டங்களுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பூத் கமிட்டிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டு வரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.