தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் பல திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த் வரும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன் அனுமதி இன்றி விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற பிரேமலதா அறிவித்துள்ளார். முறையாக அனுமதி பெற்ற பிறகு திரைப்படங்களில் அவரை AI மூலமாக பயன்படுத்த வேண்டும் என்றும் இதுவரை அவ்வாறு பயன்படுத்துவதற்கு யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக விஜயின் GOAT திரைப்படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த் காட்சிகள் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.