
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, திஷா பதானி, மிருணாள் தாக்கூர், நடிகர் பசுபதி, நடிகர் கமல்ஹாசன், நடிகர் அமிதாபச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி கல்கி படம் இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.