ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து வாஷிங் மிஷின்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவிற்கு ஹவாலா பணத்தை கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது சீல் பிரிக்காமல் வாஷிங் மெஷின்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாஷிங் மிஷின்களை சோதனை செய்தபோது அதனுள் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. மொத்தம் 1.30 கோடி ரூபாயை போலீசார் அந்த ஆட்டோவில் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த பணம் ஹவாலா பணமா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.