குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர். இவரை கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணி வாங்கியுள்ளது. குஜராத் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்நிலையில்நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், ஒரு ரசிகர் இது பற்றி எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு google நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பதில் அளித்துள்ளார். அவரும் இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவு கொடுத்து சுந்தர் பிச்சை பதிவு வெளியிட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.