இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை குஜராத், பஞ்சாப் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னை, லக்னோ, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் எஞ்சிய ஒரு இடத்திற்கு டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதியது.

இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே சொதப்பியது.

கே எல் ராகுல் வெறும் 11 ரன்களில் வெளியேற கேப்டன் டூப்ளசிஸ்-ம் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க இறுதியில் 18.2 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து டெல்லி ஆல் அவுட் ஆனது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இதனால் டெல்லி அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதன் மூலம் மும்பை அணி 11 வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மேலும் முதலிடத்தில் சென்னை அணி இருக்கிறது. அதாவது சிஎஸ்கே இதுவரையில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளதால் முதலிடத்தில் சென்னையும் இரண்டாம் இடத்தில் மும்பையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.