தமிழகத்தில் இன்று ஜூலை 12 முதல் 14ஆம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 12 ஆம் தேதி 275 பேருந்துகளும், ஜூலை 13 ஆம் தேதி 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 12ஆம் தேதி 65 பேருந்துகளும் ஜூலை 13 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்கப்படும். மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.