
விப்லா அறக்கட்டளையின் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல்..
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வில் இருக்கிறார். அனுபவமிக்க வலது கை பேட்ஸ்மேன் இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுவார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அணியில் ராகுல் இடம் பெற்றுள்ளார். சில நாட்களுக்கு பின் இந்த சுற்றுப்பயணத்திற்காக அவர் அங்கு செல்வார். இதற்கிடையில், ராகுல் விப்லா அறக்கட்டளையின் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டார், அதன் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
2023 உலகக் கோப்பையில் கே.எல்.ராகுலின் ஃபார்ம் மிகவும் சிறப்பாக இருந்தது. போட்டியில் 452 ரன்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு செல்லவுள்ள நிலையில், பயிற்சியை ராகுல் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில், டிசம்பர் 7, வியாழன் அன்று, 31 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் 35 வயதான என்ஜிஓ விப்லா அறக்கட்டளையின் குழந்தைகளை சந்திக்க வந்தார். அப்போது பள்ளி மாணவர்களுடன் நேரத்தை செலவிட்ட அவர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் சில படங்களை ராகுல் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
அதில், 35 வருடங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கை அமைய உதவுவதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இப்போது விப்லா அறக்கட்டளையுடன் இணைந்து பங்களிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்..
இந்த அறக்கட்டளையில் தற்போது ராகுலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் அனாதை குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிப்பார். கிரிக்கெட் பற்றி பேசுகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டிசம்பர் 17 முதல் தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் அணிக்கு தலைமை தாங்குவார். ராகுலின் உலகக் கோப்பை ஃபார்ம் இந்த சுற்றுப்பயணத்திலும் தெரியும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
35 years of unwavering commitment towards helping women and children have a better life. Truly inspiring ❤️
So grateful to now have the opportunity to contribute and do my bit with the @Viplafoundation 🙏 pic.twitter.com/DgZNlttVBH
— K L Rahul (@klrahul) December 7, 2023