
தென்மாவட்டங்களை மழை வெள்ளம் கடுமையாக புரட்டி போட்டிருக்கிறது. மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டில் இருந்த நிலையில் மக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வானிலை மையத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சொல்வதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
நிர்வாகத் தோல்வியை மறைக்க, காலங்காலமாய் திமுக மத்திய அரசின் மீது பழிபோடுகிறது. தற்போது மழை பாதிப்பை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வானிலை ஆய்வு மையத்தின் மீது பழிபோடுகிறது. இந்த திமுகவின் துருப்பிடித்த யுக்தியை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.