
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி தற்போது புதிய வகையான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபகாலமாக வாட்ஸப்பில் போக்குவரத்து இ சலான்கள் அனுப்பப்படுகிறது.
மேலும் அதில் URL மற்றும் APK பைல்ஸ் இணைக்கப்படுகின்றன. Whatsapp பயனர்கள் அந்த பைல்ஸை தவறாக பதிவிறக்கம் செய்ததும் அவர்கள் தொலைபேசியை அணுகி பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து பணத்தை திருடி விடுகின்றனர். இது தொடர்பாக சைபர் பாதுகாப்பு அமைப்பு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.