உத்தரபிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள காந்தி உதயன் பூங்கா அருகே, இரண்டு இளம் பெண்கள் தங்கள் காதலர்களை மையமாகக் கொண்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் திட்டி, தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியானதும் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், இரண்டு இளம்பெண்கள் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்து, உதைத்து, கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொள்வது தெளிவாகக் காணப்படுகிறது. அருகிலிருந்த பொதுமக்கள் இந்தக் காட்சிகளை பார்த்தபடியே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

 

இந்த சண்டைக்கான காரணம், இருவரும் தங்களது காதலர்களுடன் ஒரு ‘ரீல்ஸ் வீடியோ’ எடுக்க விரும்பியது தான். இதிலிருந்து ஆரம்பமான சிறு வாக்குவாதம், குறுகிய நேரத்தில் தாக்குதலாக மாறியது. அப்பெண்களின் காதலர்களும் அப்பாவியாக அருகில் நின்றபடியே சண்டையை அடக்க முயன்றாலும், அவர்கள் முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பரேலி காவல்துறையும் இதில் தலையிட்டுள்ளது. “இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையான நடவடிக்கைகள் எடுக்க காவல் நிலையத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என பரேலி போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ X  பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.