
நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் பேட்டியளித்தபோது, தளபதி விஜய்யும் நானும் இணைவது பற்றி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, விஜய்யுடன் கண்டிப்பாக இணைவேன். அந்த நேரத்தில் நான் சொல்லும் கதை அவருக்கு பிடிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது “வாடிவாசல் திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. லண்டனில் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக ரோபோ காளை ஒன்றை உருவாக்கி வருகிறோம். சூர்யா வளர்க்கும் மாட்டை ஸ்கேன் செய்து, அதேபோன்ற ஒரு ரோபோ காளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.