
மத்திய அரசாங்கம் வாடகை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலமாக வீடு கட்டுவதற்கு மானியம் பெறலாம். இதற்கிடையில் இந்த திட்டத்திற்கான மானிய தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தாரர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 18 லட்சம் வரை இந்த திட்டத்தில் கடன் கிடைக்கும். மூன்று சதவீதம் வருடாந்திர வட்டி தள்ளுபடி கிடைக்கும். எடுத்துக்காட்டாக 8 லட்சம் கடன் பெற்றால் 2.20 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.