சென்னை மாநகராட்சிக்கு வரிகள் செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் சில வர்த்தக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மாநகராட்சியானது நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவர்கள் வரிகளை செலுத்தவில்லை. இதையடுத்து சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 2 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. இதேப்போன்று நாயர் ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றுள்ளது.

அந்த காம்ப்ளக்ஸில் மொத்தம் 43 கடைகள் உள்ளன. இந்த கடையின் வியாபாரிகள் 4 வருடமாக வரிகள் செலுத்தாமல் இருந்துள்ளனர். எனவே அந்த 43 கடைகளையும் இன்று சீல் வைத்தனர். மேலும் பனகல் பார்க் பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளது. அதில் 57 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளுக்கும் மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வாரம் இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.