
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன் மூலம் பணத்தை கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் கோபமடைந்த அஜித் காயத்ரியை நேரில் சந்தித்து இரும்பு ராடால் தாக்கியதில் பலத்த காயமடைந்த காயத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காசிமேடு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்துள்ளனர்.