மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சல் புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், MP/MLAக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.