
இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டாகார்ப். இந்நிலையில் பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது. ஜூலை 3 முதல் பல்வேறு பைக்குகள், ஸ்கூட்டர்களின் விலை சுமார் 1.5% வரை உயர்த்தியுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.
Splendor, Glamour, pleasure, Passion pro மற்றும் பிற மாடல்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்தான் ஹீரோ பைக்குகளின் விலை அதிகரித்தது. விலைவாசி உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதனை குறைப்பதற்கு புதுமையான நிதி தீர்வுகளையும் தொடர்ந்து வழங்கும் என்று உறுதி அளித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வால் கொள் முதல் செய்ய தயங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.