
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் குற்றசாட்டுகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
போக்குவரத்தை சரி செய்வதற்காகவும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆங்காங்கே போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பார்கள். போக்குவரத்து போலீசாரை கண்டதும் திடீரென வாகன ஓட்டிகள் பயந்து போய் வேகமாக செல்வதால் சில நேரங்களில் விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது.
இதை தடுக்கும் விதமாக தான் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இனிமேல் வாகனத்தை வேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் செல்லுதல் போன்றவைகளுக்கு மட்டும் தான் அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த புதிய அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.