
மும்பையின் செம்பூர் பகுதியில் வசிக்கும் சுல்தானா என்ற இளம் பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்ல நாய்க்கு தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார். நகை கடைக்காரர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர்.
டைகர் என்ற செல்ல நாயின் பிறந்த நாளில் இளம் பெண் தங்க சங்கிலியை வாங்கி அணிவித்து அழகு பார்த்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்தது. நெக்லஸ் காக நாய் பொறுமையாக காத்திருப்பதும் அதன் கழுத்தில் தங்க சங்கிலி போடப்பட்ட போது நாய் அன்புடன் வாலை ஆட்டுவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இவரின் இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.