சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த t20, டெஸ்ட், ஒரு நாள் அணிகள் மற்றும் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து அங்கீகரிப்பது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கமிந்து மெண்டிஸ் 1451 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 1049 ரண்களை எடுத்த கமிந்து மெண்டிஸ் 75 ஆண்டுகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதோடு தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் அடித்த முதல் நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.