
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை குறித்து கேள்வியெழுப்பிய போது, ‘வளர்த்த ஆடு மார்பில் பாய்வது போல அண்ணாமலை செயல்படுகிறார். வளர்த்த கிடா மார்ல பாயக் கூடாது; அது கிடாவாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி.
அண்ணாமலை குறித்த EPSஸின் கருத்து 100% சரியே. அவருடைய அரசியல் அனுபவம் வெறும் 2 ஆண்டுகள் தான். எனக்கு 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருக்கிறது. கூட்டணியில் இருந்துக்கொண்டு மாறுபாடாக பேசக்கூடாது’ என்றார்.