திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த எட்டாம் தேதி பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் மட்டும் தான் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவரது செல்போன் எண்ணுக்கு இரண்டு தொலைபேசி எண்களில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்துள்ளது. அதன் அடிப்படையில் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ், குமரேசன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கடந்த 7  ஆண்டுகளாக குமரேசனுக்கும் அந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. குமரேசன் சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.

அந்த சமயம் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருடன் அந்த பெண் நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்ற குமரேசன் ஊருக்கு வந்து விட்டார். இதனால் விக்னேஷுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே இருக்கும் உறவு குமரேசனுக்கு தெரியவந்தது. கடந்த 10ஆம் தேதி அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குமரேசன் அவரது வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த குமரேசன் அந்த பெண்ணை அடித்து பலாத்காரம் செய்ததால் அந்த பெண் மயங்கி விட்டார். இதனை தொடர்ந்து விக்னேஷும் மயக்க நிலையில் இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததால் அந்த பெண் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.