
ஆந்திராவில் மனநலம் பாதிக்கப்பட்ட ரம்யா ஸ்மிருதி என்ற பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ரம்யாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரம்யாவை உறவினர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ரம்யா உறவினர்கள் பட்டன் செல்போனை விழுந்துவிட்டார்.
ஸ்கேன் எடுத்து பார்த்தபோது ரம்யா செல்போனை விழுங்கியது உறுதியானது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த போனை வெளியே எடுத்து விட்டனர். ஆனாலும் ரம்யாவின் உணவு குழாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.