
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் அரசு ஊழியர்கள் சார்பாக நீண்ட நாட்களாக பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வைப்பு நிதிகளுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் எந்த மாற்றமும் இன்றி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 7.1% வட்டி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வட்டி விகிதம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.