
கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து வருகின்றது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கான நிதியை வழங்குவோம் என்று கூறிக்கொண்டு ஐந்தாயிரம் கோடி நிதியை இழந்து விடுவோம் என மிரட்டி கொண்டிருக்கிறது. இப்படி செய்யக்கூடிய உங்களுக்கு தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு தரவேண்டிய வரியை ஒரு ரூபாய் கூட தர மாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்.
பிளாக்மெயில் செய்து இந்தியை திணிப்பது அரசியல் கிடையாதா? கொடுத்து பெறுவது தான் கூட்டாட்சி தத்துவம். இதனை புரிந்து கொள்ளாதவர்கள் மிகப் பெரிய சாபக்கேடு. நம் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காகவும் சமூக நீதியை சிதைப்பதற்காகவும் தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.