ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தீர்மானத்திற்கு அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவினரைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனம் வைக்க தான் விரும்பவில்லை.

கூட்டணி கட்சி, தலைவர்களை நடத்தும்விதம் குறித்து தனக்கு யாரும் எடுத்துச் சொல்ல தேவையில்லை என்று கூறிய அவர், தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதையே கூறியிருப்பதாகவும், ஊழலும், முதல்வர்களும் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.