உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுமிக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது.

பிரசவ வலியால் தான் சிறுமி துடித்துள்ளார் குழந்தை பிறந்ததை அறிந்தவுடன் சிறுமியின் தந்தை தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.